நீ கட்டி ஆள
உலகம் இருக்கு
தட்டிக் கொடுக்க
உன் தந்தை இருக்கன்
தயங்காது வா...
வீரப் புதல்வனே!
உன்னை வரவேற்க
போர் வாழும்
கேடயமும் தரமாட்டேன்.
வெண் மல்லிகை மாலை இருக்கு
அணிந்துகொள்
உலகில் சமாதான மணம் பரப்ப...
நீ !
உலாவர பல்லக்கு கிடையாது
உன்னை தூக்கிச் சுமக்க
எந்தையும் கிளவன்
எனினும் தயங்காதே
உடனே வா
உந்தையின் தோள் இருக்கே
ஏறிச் சவாரி செய்...
மகனே!
நான் நிலாத் தாயின் புதல்வன்.
நட்சத்திரக் குளந்தை.
கருமேகம் சூழ்ந்து
என் ஒளி குன்றியதால்
உந்தை இன்று
ஒழிந்தான் என்று
தயங்காதே...
வெற்றிச் சூரியனே!
உடனே வா
கார் இருள் எரிக்கும்
சுடர் கதிர் ஏந்திவா
என் வாழ்வில்
விடியலைக் கொண்டுவா
எனக்கு சந்தோசம் அள்ளித்தா...
தொய்யம் வட்டை எல்லாம்
ஆடு மேய்த்து ஆளானார்
உன் பாட்டன்.
நான்
எந்தையின் பாதம் தொர்ந்து
குலம் காத்தேன்
நீ என்ன செய்வாய்?
நவீன சாத்தான்களின்
உலகை அழித்து
புது யுகம் படைப்பாயா?
இல்லை
வேண்டாத நற்பு வளர்த்து
என் குலம் அழிப்பாயோ?
குலம் காப்பாய் -என் குடிதளிர்க்க
கூடுதல் நம்பிக்கை
நலமாய் பிறப்பாய் - என் மகனே
தயங்காது வா!