தூங்காதே தோட்டக்காவலனே!
நீ காவல் இருக்கும் பூந்தோட்டம்
தனி ஒருவனின் சுகபோகத்துக்காய்
எழுதப்பட்ட மரண சாதனமல்ல;
அடக்குமுறை எனும் இருட்சிறைக்குள்
விலங்கிட்டுக் கிடந்த அடிமைகளுக்கு
விடுதலைச் சுடர் ஏந்திவந்த
வெற்றிச்சூரியன் தந்த வக்பு.
காவலனே!
பூர்வீகம் பேசி சிலர்
அதை அவதரித்து
தனியுரித்துப் புரியலாம்;
அடிப்படைக்காவலன் நான் - என்று
தலைவன் நட்ட மர நிழளில் - நின்று
சிலர் வேசியாட நினைக்கலாம்;
காவலனே கேள்!
உள்ளிருந்துஅவர்களைக்
கல்லெறிந்து விரட்டு;
நள்ளிரவுக் கள்வன் என்று
உனைப் பார்த்து
நாய்கள் குரைக்கும்;
அஞ்சாதே!
திரும்பாதே!
அவை அவன் எச்சில் தின்ற விசுவாசம்.
காவலனே கேள்!
தோட்டத்தில் அலங்காரம்
வேண்டு மென்று
பழைய மதிரையிம்
முனையூர் முதிரையிம்
புறத் ஒதுக்கப்பட்டு
கள்ளியிம் பூமுத்தையிம்
வெள்ளெருக்கும் நாட்டுகிறார்
உடனே பிடுங்கி எறி
இல்லையேல்
நிழள் காயிம் நம் குலம்
விஷக் காற்றில் மாளாதோ?